கோவில்களில் நடை சாத்தப்பட்டது

சந்திர கிரகணத்தையொட்டி புதுக்கோட்டையில் கோவில்களில் நடை சாத்தப்பட்டது.

Update: 2022-11-08 18:18 GMT

சந்திர கிரகணம்

பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும் போது அது சூரியனிடம் இருந்து நேரடியான ஒளியை பெற முடியாது. நிலவு, பூமி, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது இது நிகழும். அப்போது நிலவின் ஒளி குன்றுவதையே சந்திரகிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த சந்திரகிரகணம் இன்று தோன்றியது.

புதுக்கோட்டையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சந்திர கிரகணம் முழுமையாக தெரியவில்லை. இந்த நிலையில் கிரகணத்தையொட்டி கோவில்களில் நடை சாத்தப்பட்டன. புதுக்கோட்டையில் டவுன் சாந்தநாத சாமி கோவில், மனோன்மணியம்மன் கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்றுமதிய பூஜைக்கு பின் நடை சாத்தப்பட்டன. மாலை 4 மணிக்கு திறக்கப்படும் நடையானது, கிரகணகத்தால் திறக்கப்படாமல் சாத்தப்பட்டன.

பக்தர்கள் தரிசனம்

கிரகணம் முடிந்த பிறகு ஆகம விதிகளின் படி கோவில் நடை திறக்கப்பட்டது. அதன்பின் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் வழக்கம் போல இரவில் நடை சாத்தப்பட்டது.

கீரனூர்

கீரனூரில் உள்ள சிவன் கோவிலில் நடை சாத்தப்பட்டது. இதனால் கோவிலில் பூஜைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு பிறகு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் சந்திர கிரகணம் தெரியவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்