விபத்தில் வாலிபர் பலி

ராஜபாளையம் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2022-06-03 20:13 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ராஜபாளையம் அருகே உள்ள முத்துச்சாமிபுரத்தை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 21). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த திருவேங்கடபுரத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் ஜெயராமிடம் சிவகாசியில் இறக்கி விடும் படி கூறியுள்ளார். பின்னர் இருவரும் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருகே எதிரே வந்த வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெயராம் உள்பட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயராம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்