வாலாஜா தாலுகா அலுவலக நடை பாதையை சீரமைக்க வேண்டும்
வாலாஜா தாலுகா அலுவலக நடை பாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலக நுழைவுவாயில் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. அதை மூடி நடைபாதையாக அமைக்கப்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்துக்கு உள்ளே வருபவர்களும், வெளியே செல்லும் பொதுமக்களும் இந்த நடைபாதை வழியாக நடந்து செல்கின்றனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக நுழைவுவாயில் முன்பு நடைபாதையை மூடாமல் விட்டுள்ளனர். இதனால் இரவில் நடைபாதை வழியாக செல்பவர்கள் இந்தக் கால்வாய் பள்ளத்தில் விழுந்து அடிபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை மூடி போட்டு நடைபாதையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.