வாலாஜா நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 73 கண்காணிப்பு கேமராக்கள்

வாலாஜா நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 73 கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.;

Update: 2022-11-28 18:17 GMT

வாலாஜா நகராட்சியில் உள்ள மூன்று பிரதான சாலைகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 73 கண்காணிப்பு கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை தொடங்கிவைத்தார்.

கலெக்டர் பாஸ்கரபாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், நகரமன்ற தலைவர் ஹரிணிதில்லை, துணைத் தலைவர் கமலராகவன், நகராட்சி ஆணையர் குமரிமன்னன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்