அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்காத்திருப்போர் கூடம் கட்டுமான பணிபுகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்போர் கூடம் கட்டுமான பணியை புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் நோயாளிகள், உதவியாளர்கள் தங்குவதற்கு ஏதுவாக காத்திருப்போர் கூடம் மற்றும் கழிப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதை புகழேந்தி எம்.எல்.ஏ. ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார். ஆய்வின் போது நிலைய மருத்துவ அலுவலர் ரவிக்குமார், உதவி நிலைய மருத்துவ அலுவலர் வெங்கடேசன், துறைத் தலைவர் டாக்டர் அறிவழகன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், இளந்திரையன், ஒப்பந்ததாரர் பிரகாஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.