பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்

பாதிப்புகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்

Update: 2022-11-04 18:45 GMT

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து தீயணைப்புத்துறை சார்பில் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்பு டி.ஜி.பி. ரவி நேற்று வேதாரண்யம் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வடகிழக்கு பருவமழை முன்ெனச்சரிக்கை மற்றும் பாதிப்புகளை சரி செய்ய தீயணைப்பு நிலையத்தில் உள்ள மரம் வெட்டும் கருவி, ரப்பர் படகு, தண்ணீர் இறைக்கும் மோட்டார் மற்றும் நவீன மீட்பு பணி உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மீட்பு பணி வீரர்களிடம் வடகிழக்கு பருவ மழையில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். முன்னதாக ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., டி.ஜி.பி. ரவியை சந்தித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்