வாக்காளர் தின விழிப்புணர்வு முகாம்
பந்தலூர் அரசு பள்ளியில் வாக்காளர் தின விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பந்தலூர்,
பந்தலூர் அரசு மேல்நிலை பள்ளியில் வருவாய்த்துறை சார்பில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு பந்தலூர் தாசில்தார் நடேசன் தலைமை தாங்கி வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளியில் இருந்து தொடங்கிய முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பேரணி பள்ளியை வந்தடைந்தது. அப்போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர். இதில் தேர்தல் துணை தாசில்தார் ராஜேந்திரன், ஆசிரியர்கள் சித்தானந்த், சுரேஷ், ஸ்டீபன், ஜோதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.