வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-01-25 19:00 GMT

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை நாகை உதவி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி கலெக்டர் பானோத்ம்ருகேந்தர்லால் முன்னிலை வகித்தார். இதில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஊர்வலம் பல்வேறு வீதிகள் வழியாக இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அங்கு வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமன், தேர்தல் தாசில்தார் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்