மாவட்ட பார்வையாளர் ஆபிரகாம் ஆய்வு

தஞ்ைசயில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியை மாவட்ட பார்வையாளர் ஆபிரகாம் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-03 21:25 GMT

தஞ்சாவூர்;

தஞ்ைசயில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியை மாவட்ட பார்வையாளர் ஆபிரகாம் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சமூக சீர்திருத்தத்துறை அரசு செயலாளருமான ஆபிரகாம் தலைமை தாங்கினார். கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

பணிகள் குறித்து ஆய்வு

கூட்டத்தில் அரசு செயலாளர் ஆபிரகாம் பேசும்போது, இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பாக மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட உள்ளது என்றார். தொடர்ந்து அவர், வல்லம், திருவையாறு மற்றும் பூதலூர் வட்ட அலுவலகங்களில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா, வருவாய் கோட்டாட்சியர்கள் ரஞ்சித் (தஞ்சை), பிரபாகரன் (பட்டுக்கோட்டை), பூர்ணிமா (கும்பகோணம்) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்