வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி

தேனியில் வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-25 18:45 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. மனித சங்கிலியை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து மாணவர்களுடன் பங்கேற்றார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து அரசு தொழிற்பயிற்சி நிலையம் வரை மாணவ, மாணவிகள் மனித சங்கிலியாக கரம்கோர்த்து நின்றனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

பின்னர், தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை கலெக்டர் முரளிதரன் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) அன்பழகன், (கணக்கு) முகமது அலி ஜின்னா, தேர்தல் பிரிவு தாசில்தார் செந்தில்முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதுபோல், தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீசார், போலீஸ் சூப்பிரண்டு அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்