எதிர்க்கட்சியில் இருக்கிற வேட்பாளருக்கு வாக்களித்துதொகுதியின் வளர்ச்சியை மக்கள் பறி கொடுக்க மாட்டார்கள்;கொ.ம.தே.க. மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி

எதிர்க்கட்சியில் இருக்கிற வேட்பாளருக்கு வாக்களித்து தொகுதியின் வளர்ச்சியை மக்கள் பறி கொடுக்க மாட்டார்கள் என்று ஈரோட்டில் கொ.ம.தே.க. மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

Update: 2023-02-11 21:00 GMT

எதிர்க்கட்சியில் இருக்கிற வேட்பாளருக்கு வாக்களித்து தொகுதியின் வளர்ச்சியை மக்கள் பறி கொடுக்க மாட்டார்கள் என்று ஈரோட்டில் கொ.ம.தே.க. மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

வளர்ச்சி

தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கொ.ம.தே.க. மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., அமைச்சரகள் செந்தில் பாலாஜி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் ஈரோடு சம்பத்நகர் மற்றும்வீரப்பன்சத்திரம் காவிரி ரோடு பகுதியில் நேற்று கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். களத்தில் மக்களின் ஆதரவை பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. தமிழக முதல்-அமைச்சரின் செயல்பாடுகளுக்கும், அரசு அறிவித்த திட்டங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கிற வகையிலும், இன்னும் பல திட்டங்களை அறிவிக்க ஊக்கப்படுத்திடும் வகையிலும் மக்கள் கை சின்னத்தில் வாக்களித்து பெரிய வெற்றியை வழங்குவார்கள்.

எதிர்க்கட்சியில் இருக்கிற வேட்பாளருக்கு வாக்களித்து தொகுதியின் வளர்ச்சியை மக்கள் பறி கொடுக்க மாட்டார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியிடுவது வெற்றி பெறுவதற்காக அல்ல. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இதில் யார் பெரியவர்கள் என்று பார்ப்பதற்காகத்தான்.

2 நாட்கள் பிரசாரம்

தமிழக முதல்- அமைச்சர் ஈரோட்டில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார். அது தி.மு.க. கூட்டணி வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தை அதிகப்படுத்துவதற்காகவும், ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்திடவும், அரசின் திட்டங்களையும், அவர் செய்த பணிகளையும் எடுத்து சொல்வதற்காக தான்.

இவ்வாறு ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.

அப்போது அவர்களுடன் கொ.ம.தே.க. இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, வீரப்பன்சத்திரம் பகுதி தி.மு.க. செயலாளர் வி.சி.நடராஜன், 24-வது வார்டு வட்ட செயலாளர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்