பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 36 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

வேதாரண்யத்தில், பள்ளி விடுதியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 36 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

Update: 2022-07-28 16:41 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில், பள்ளி விடுதியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 36 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அரசு உதவி பெறும் பள்ளி

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி விடுதியில் தங்கி 190 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை விடுதி மாணவிகள் 140 பேர் கோதுமை உப்புமா சாப்பிட்டனர். இதில் ஒரு மாணவியின் உணவில் பல்லி வால் கிடந்ததாக தெரிகிறது.

மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்

உணவு சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 36 மாணவிகளுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மூலம் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ., வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் தாசில்தார் ரவிச்சந்திரன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, ஊராட்சி ஒன்றியக்குழுதலைவர் கமலா அன்பழகன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம் உள்பட பலர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்ற மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பரபரப்பு

இதனைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று 36 மாணவிகளும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

பள்ளி விடுதியில் பல்லி வால் விழுந்த உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

---------


Tags:    

மேலும் செய்திகள்