குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம்
ஆரணி அருகே குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடித்த சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.
கண்ணமங்கலம்
ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்த குடிநீரை குடித்த ரத்தீஷ் (வயது 7), பூபதின் (9), ஆர்.தர்ஷன் (10), கோபிகா (14), மற்றொரு தர்ஷன் (7), சுஷ்மிதா (8), காயத்ரி (11), பூவரசன் (9) ஆகிய சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் காமக்கூர்பாளையத்தில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட கோபாலகிருஷ்ணன் (13) வெற்றிச்செல்வன் (21) சுவாதி (20) கயல்விழி (1½) ஆகியோர் மயக்கம் அடைந்தனர்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் நலமுடன் உள்ளனர்.
இச்சம்பவம் இரு கிராமங்களில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.