மாணவிகளுக்கு வாலிபால் பயிற்சி
விருதுநகரில் மாணவிகளுக்கு வாலிபால் பயிற்சி முகாம் நடைபெற்றது.;
விருதுநகர்,
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு வாலிபால் அசோசியேஷன் சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 80 மாணவிகள் கலந்து கொண்டனர். 15 தினங்கள் நடைபெற்ற இந்த பயிற்சி முகாம் நிறைவு நாளில் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் செயலாளர் துரைசிங் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விளையாட்டு உடைகள் வழங்கினார்.