இட்டமொழி:
மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மூன்றடைப்பு அருகே அம்பூரணி சாத்தான்குளத்தில் கைப்பந்து போட்டி நடந்தது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 39 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில் முதல் பரிசை சங்கனாங்குளம் அணியும், 2-வது பரிசை முதலூர் அணியும், 3-வது பரிசை அம்பூரணி சாத்தான்குளம் அணியும் வென்றது. விழாவில் நாங்குநேரி யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, கட்சி நிர்வாகிகள் சின்னத்துரை, மந்திரமூர்த்தி, கோமதிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.