தொழிலாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

உத்தமபாளையம் அருகே ெதாழிலாளியை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்;

Update: 2022-06-07 17:58 GMT

உத்தமபாளையம் தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 33). இவர் கம்பத்தில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று நள்ளிரவு வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் கம்பத்தில் இருந்து உத்தமபாளையம் நோக்கி வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

உத்தமபாளையம் பி.டி.ஆர்.காலனி அருகே வந்தபோது மர்ம நபர்கள் சுரேஷ்குமார் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் சிறிது தூரம் சென்று அனுமந்தன்பட்டி புதிய பைபாஸ் ரவுண்டானா வாய்க்கால் பாலம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்