தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம்

தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2023-07-29 18:44 GMT

பேட்டை:

தமிழ்நாடு தொழில் பயிற்சி அலுவலர் சங்கம் சார்பாக பேட்டை ஐ.டி.ஐ. அருகில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. தூத்துக்குடி கிளைச் செயலாளர் முருகன் வரவேற்றார். சங்க மாநில தலைவர் சீனிவாசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நெல்லை மண்டல செயலாளர் சேகர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். அவர் பேசுகையில், மத்திய அரசு அறிவித்துள்ளபடி தகுதியின் அடிப்படையில் முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பயிற்றுநர்கள் மற்றும் உதவியாளர்களை தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதிப்படி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார். மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு ஊழியர் சங்கங்களை சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி நிறைவு உரையாற்றினார். திருச்செந்தூர் கிளைச் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்