திறப்பு விழா கண்டும் திறக்கப்படாத தொழிற்பயிற்சி நிலையம்
திறப்பு விழா கண்டும் திறக்கப்படாத தொழிற்பயிற்சி நிலையம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- ஆலங்காயம் சாலையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். திறந்து வைக்கப்பட்டு 2 மாதங்களாகியும் இந்த தொழிற்பயிற்சி நிலையம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது தனியார் கட்டிடத்தில் பல லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து செயல்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாடகை கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு தொழிற்பயிற்சி நிலையத்தை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.