வ.உ.சி. சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை

நெல்லையில் வ.உ.சி. சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Update: 2022-09-05 19:23 GMT

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 151-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் பொருட்காட்சி திடல் மணிமண்டபத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக அரசு சார்பில் சபாநாயகர் அப்பாவு, வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஞானதிரவியம் எம்.பி., கலெக்டர் விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன், நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, நெல்லை தாசில்தார் செல்லசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், நெல்லை டவுனில் உள்ள வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்ககுமார், துணைத்தலைவர் கவி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பா.ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் தயாசங்கர்உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்