வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பு

சங்கரன்கோவிலில் வ.உ.சி. உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2022-11-18 18:45 GMT

சங்கரன்கோவில்:

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி, சங்கரன்கோவில் பழைய பஸ்நிலையம் முன்பு வ.உ.சி. கல்வி அறக்கட்டளை சார்பில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு கவுரவ தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், நிறுவனர் மாணிக்கம், தலைவர் மெர்க்குரி சங்கர், செயலாளர் திருமலைக்குமார் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஆறுமுக நயினார் மகமை பொதுச்சங்க தலைவர் கோமதிநாயகம், தி.மு.க. சார்பில் ராஜா எம்.எல்.ஏ., சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவி உமாமகேஸ்வரி சரவணன், இளைஞரணி சரவணன், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, பாசறை பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் கருப்பசாமி, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.சி.மாரியப்பன், தலைமை கழக பேச்சாளர் கணபதி மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோன்று ம.தி.மு.க. மாநில இளைஞரணி துணைத்தலைவர் இசக்கியப்பன், நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, காங்கிரஸ் நகர தலைவர் உமாசங்கர், பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுருநாதன், பொருளாளர் குருசாமி, மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜா, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ராஜலட்சுமி சுந்தர்ராஜ், பார்வர்டு பிளாக் மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், வ.உ.சி. கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் சோமசுந்தரம் உள்ளிட்டவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்