விளாத்திகுளம்தாலுகா அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-12 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஜோதி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையில் மாமுநயினார்புரம் கிராம மக்கள் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் தாசில்தார் சசிகுமாரிடம் வழங்கிய மனுவில், "விருசம்பட்டி ஊராட்சி மாமுநயினார்புரம் கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சட்டத்துக்கு புறம்பாக மாமுநயினார்புரம் கிராமத்தில் நீர்வழிப்பாதையை மறித்து மிகப்பெரிய சாலை அமைப்பதும், அளவுக்கு அதிகமான எடை உள்ள எந்திரங்களையும், வாகனங்களையும் இயக்குவதால், சாலை முழுவதும் சேதமடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதே போல், நீர்வழித்தடங்களை மறித்து சாலை அமைப்பதால் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கும் நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே, சட்டவிரோதமாக காற்றாலைகள் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்