விளாத்திகுளம் அருகே வீட்டிற்குள் அழுகிய நிலையில் பட்டதாரி ஆண் பிணம்
விளாத்திகுளம் அருகே வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த பட்டதாரி ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் காமராஜர் முதல் தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் கார்த்திகேயன் (வயது 45). இவர் எம்.எஸ்சி பட்டம் பெற்றவர். தாய், தந்தையர் இறந்து விட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விளாத்திகுளம் போலீசார் சம்பவ வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அழகிய நிலையில் கார்த்திகேயன் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்