விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சங்காபிஷேகம்

விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது.;

Update: 2022-12-13 18:45 GMT

விளாத்திகுளம்:

கார்த்திகை மாத கடைசி சோமவார பிரதோஷ தினத்தை முன்னிட்டு விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 108 சங்குகள் சிவலிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், திருநீறு, சந்தனம், இளநீர் உட்பட பல வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை செய்து வைக்கப்பட்டிருந்த 108 சங்குகளில் இருந்த தீர்த்தத்தால் முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபாரதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்