விவேகானந்தர் பிறந்தநாள் விழா

தேனியில், விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-12 15:35 GMT

தேனி மாவட்ட இந்து முன்னணி சார்பில், விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேனி நேரு சிலை சிக்னல் அருகே நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். விவேகானந்தர் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பாண்டியன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜன், பாரதீய மஸ்தூர் சங்க மாநில செயலாளர் பாலன், விவேகானந்தர் ஜெயந்தி விழாக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் மற்றும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஏ.பி.வி.பி. உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி அல்லிநகரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு விவேகானந்தர் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவையொட்டி 10 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்