அவினாசியில் பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை தேரோட்ட திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து சூரிய சந்திர மண்டல காட்சி, அதிகாரம் நந்தி கிளி, பூதம், அன்ன வாகன காட்சிகள் நடைபெற்றன. பின்னர் கைலாச வாகனம் புஷ்பலக்கு வைபவம் நடைபெற்றது. இதில் சுவாமி சிறப்பு அலங்கார தோற்றத்தில்ரத வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று இரவு 8 மணி அளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பட்டு திருவீதி உலா வந்து பத்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.