குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து திரவம் கொடுக்கும் முகாம்
குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து திரவம் கொடுக்கும் முகாம் 4-ந் தேதி தொடங்குகிறது.;
6 மாதம் முதல் 60 மாதம் வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து திரவம் 6 மாதத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. வைட்டமின் 'ஏ' திரவம் குழந்தைகள் சராசரி வளர்ச்சியடைய உதவி செய்கிறது. மேலும் கண் பார்வை குறைபாடு வராமல் தடுக்கிறது. அதனடிப்படையில், வருகிற 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 43,448 குழந்தைகளுக்கு கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் வீடு வீடாக சென்று வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படவுள்ளது. 6 மாதம் முதல் 60 வது மாதம் வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் 'ஏ' திரவம் கொடுத்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.