விசுவ இந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பினர் மறியல்; 52 பேர் கைது

விசுவ இந்து பரிஷத்-பஜ்ரங்தள் அமைப்பினர் மறியலில் ஈடுபட்டதையடுத்து, 52 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-08 22:06 GMT

ஸ்ரீரங்கம்:

விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பின் 60-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், பஜ்ரங்தள் கோட்ட பொறுப்பாளர் சப்தரிஷி தலைமையில் திருவானைக்காவல் பகுதியில் நேற்று நடைபெற இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையில் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் முன்னாள் மாநில தலைவர் குழைக்காதர், மாநில அமைப்பாளர் சேதுராமன், மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் அங்கு கூடினர். அவர்களிடம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை, எனவே கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதை கண்டித்து அவர்கள் திருவானைக்காவல் - சென்னை டிரங்க் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை போலீசார் கைது செய்து, ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்