மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்றுமனுக்கள் வாங்கிய கலெக்டர்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு கலெக்டர் ெசந்தில்ராஜ் சென்று மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2023-03-27 18:45 GMT

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திற்கு கலெக்டர் ெசந்தில்ராஜ் சென்று மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவைஉதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 320 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளிடம் மனு...

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்து இருந்த பகுதிக்கு நேரடியாக சென்று மாற்றுத்திறனிளிகளிடம் இருந்து 48 மனுக்களை கலெக்டர் வாங்கினார். அந்த மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (பொது) அமுதா, தனித்துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்பு திட்டம்) ஜேன் கிறிஸ்டி பாய், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலஅலுவலர் சிவசங்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்