முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை: பொள்ளாச்சியில் அமைச்சர் ஆய்வு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி பொள்ளாச்சியில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Update: 2022-08-20 15:19 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி -கோவை ரோட்டில் ஆச்சிப்பட்டி அண்ணா திடலில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க. சார்பில் வருகிற 24-ந்தேதி மாலை 5 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்று கட்சியினர் 50 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணைகின்றனர். இந்த நிலையில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியினை  அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முதல்-அமைச்சர் பொதுக்கூட்ட மேடைக்கு வரும் பகுதியில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கன்னிமுத்து, பனப்பட்டி வேலுமணி, தர்மராஜ், ஜெயக்குமார், டாக்டர் செந்தில்குமார், சாந்தலிங்ககுமார், ராமகிருஷ்ணன், கவுன்சிலர் விஜய காயத்ரி சபாபதி, முருகாலயா தம்பி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்