முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி வருகிறார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அடுத்த மாதம் (நவம்பர்) 5-ந்தேதி வருகை தரவுள்ளார். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.