கண்தான விழிப்புணர்வு ஊர்வலம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-09-07 22:28 GMT

நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கண் மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டீன் ரவிச்சந்திரன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கண் மருத்துவ சிகிச்சை பிரிவு துறை தலைவர் ராமலட்சுமி வரவேற்றார். இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி மாணவிகள், பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியில் கண்தானம் பற்றி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்