கடையம்:
கடையத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடந்தது. நகை தொழிலாளர் சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். நகை தொழிலாளர் சங்க மூத்த நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், அண்ணாமலை, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் செல்வம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ் தேசிய கட்சி நிர்வாகி முருகன், ஒன்றிய கவுன்சிலர் மாரிகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர் மீனாட்சிசுந்தரம், மனுமயா சமுதாய நிர்வாகி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. முடிவில், நகை தொழிலாளர் சங்க பொருளாளர் நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.
செங்கோட்டை வம்பளந்தான் முக்கு செந்தில் விநாயகா் கோவில் முன்பு நடந்த விழாவுக்கு விஸ்வகர்ம சமுதாய பொறுப்பாளா் மாரியப்பன் தலைமை தாங்கினார். விழா கமிட்டி நிர்வாகிகள் சதீஷ், சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனா். குருவாயூர் கண்ணன் வரவேற்று பேசினார். விழாவில் செந்தில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னா் கோவில் முன்பு சமுதாய கொடியேற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டி பொறுப்பாளா்கள் சண்முகவேல், இளங்கோ, சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனா்.
இதேேபால் நெல்லை டவுன் அக்கசாலை விநாயகர் கோவில் தேவஸ்தான நிர்வாக கமிட்டி சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் கோவில் கமிட்டி இடைக்கால தலைவர் ரகுபதி ஸ்தபதி, செயலாளர் அய்யப்பன், பொருளாளர் ஸ்டார் அய்யப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.