விஸ்வகர்ம கைவினைஞர்கள் ஆர்ப்பாட்டம்
விஸ்வகர்ம கைவினைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விஸ்வகர்ம கைவினைஞர்கள் ஆர்ப்பாட்டம்பட்டுக்கோட்டை நகை தொழிலாளி ராஜசேகர் தற்கொலைக்கு காரணமான கே.கே.நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மரக்கடை பகுதியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை சங்கம் அனைத்து விஸ்வகர்ம சமூக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட நகை தொழிலாளி ராஜசேகரின் உறவினர்கள் மற்றும் விஸ்வகர்ம கைவினைஞர்கள் திருச்சி, பட்டுக்கோட்டையில் இருந்து வந்து திரளாக கலந்து கொண்டனர்.