விஸ்வபிரம்ம ஊர்வலம்

சங்கரன்கோவிலில் விஸ்வபிரம்ம ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-09-17 19:00 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகர விஸ்வ பிரம்ம மகாஜனம் சங்கம் சார்பில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா ராமசாமியாபுரத்தில் நடைபெற்றது. தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் இசக்கி ராஜன், பொருளாளர் செண்பக நாராயணன், துணைத் தலைவர் சுப்புராஜ், துணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நகை தொழிலாளர் மத்திய சங்க மாநில தலைவர் சங்கரன் வரவேற்று பேசினார்.

இதனை முன்னிட்டு விஸ்வ பிரம்ம ரத ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது விஸ்வகர்ம சமுதாய நலக்கூடத்தில் இருந்து தொடங்கி முக்கிய ரதவீதி வழியாக மீண்டும் நலக்கூடத்தை வந்தடைந்தது. இதில் சங்க நிர்வாகிகள் மாரியப்பன், வீரபாண்டியன், முத்துவேல், அருள் கணேசன், பரமசிவன், அருணாச்சலம், சிவக்குமார், சிங்கார வடிவேலு, முருகையா, சக்திவேல், வீரபுத்திரன், கைலாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜா சங்கர் நன்றி கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்