அன்னபட்சி வாகனத்தில் விசாலாட்சி அம்மன் வீதியுலா

தா.பழூரில் அன்னபட்சி வாகனத்தில் விசாலாட்சி அம்மன் வீதியுலா வந்தார்.

Update: 2023-08-12 20:15 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர்- விசாலாட்சி அம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுவாமி-அம்பாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் புதிதாக செய்யப்பட்ட அன்னபட்சி வாகனத்தில் விசாலாட்சி அம்மன் எழுந்தருளினார். அதன்பின்னர் சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது. பின்னர் அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளிய விசாலாட்சி அம்மன் ராஜவீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை செய்தனர். பின்னர் கோவிலில் அம்மனுக்கு விடையாற்றி வைபவம் நடைபெற்று மங்கல ஆரத்தி செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்