விருதுநகர்: பட்டாசு ஆலை விதிமுறை மீறல்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழு - கலெக்டர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டை விட 30 சதவீத பட்டாசுகள் இந்த ஆண்டு குறைவாக உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Update: 2022-09-05 09:57 GMT

விருதுநகர்,

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் பட்டாசு ஆலைகளில் விதிமுறை மீறல்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அறிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபடும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்படுவதால் உயிர்ச்சேதம், பொருட் சேதம் ஏற்படுகிறது. வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் பல முறை எச்சரித்தும் விதிகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் இனி பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்யும் போது விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டை விட 30 சதவீத பட்டாசுகள் இந்த ஆண்டு குறைவாக உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்