விமானத்தில் விருதுநகர் பயணி திடீர் சாவு
விமானத்தில் விருதுநகர் பயணி திடீரென இறந்தார்.
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் வந்தது. இதனையடுத்து பயணிகள் ஒவ்வொருவராக இறங்கினர். அப்போது, அந்த விமானத்தில் வந்த விருதுநகரை சேர்ந்த பரமசிவம் மகன் ராஜமுனியசாமி (வயது 36) என்பவர் இருக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விமான பணியாளர்கள் உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் விரைந்து வந்து அவரை பரிசோதனை செய்ததில் அவர் இறந்தது தெரியவந்தது. மேலும் அவர் நெஞ்சுவலி காரணமாக இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.