மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் ெதாடக்கம்

திப்பணம்பட்டியில் மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் ெதாடக்க விழா நடந்தது

Update: 2022-11-03 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் தொடக்க விழா திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட நூலக ஆய்வாளர் கணேசன் தலைமை தாங்கினார். அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ரத்தினகுமார், ஆறுமுக நயினார் மற்றும் காமராஜ் நினைவு இந்து நடுநிலைப்பள்ளி ஆசிரியை சகாய லியோனாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராமநாதன் மெய் நிகர் நூலகத்தை தொடங்கி வைத்து, மெய் நிகர் தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இந்த தொழில் நுட்ப கருவிகளை பயன்படுத்துவது குறித்த செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன. முடிவில் வாசகர் வட்ட செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்