'மெய் நிகர் நூலகம்' செயல்விளக்க நிகழ்ச்சி
‘மெய் நிகர் நூலகம்’ செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது.
55-வது தேசிய நூலக வார விழாவையொட்டி மன்னார்குடி கிளை நூலகத்தில் நேற்று 'மெய்நிகர் நூலகம்' குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட நூலக அலுவலர் ஆண்டாள் தலைமை தாங்கினார். மன்னார்குடி கிளை நூலகர் ராஜா வரவேற்றார். திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை பறவைகள் ஆராட்சியாளர் கிருபா நந்தினி, தொடங்கி வைத்தார். இதில் மன்னார்குடி வட்டார கல்வி அலுவலர் இன்பவேணி, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பொன்முடி, நூலகர்கள் செல்வகுமார், ஆசைத்தம்பி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் நூலகர் அன்பரசு நன்றி கூறினார்.