தேர்தல் நடத்தை விதி மீறல்: பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது

Update: 2024-03-19 10:54 GMT

சென்னை,

தேர்தல் விதிகளை மீறிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு  சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் அட்டவணை கடந்த 16.03.2024 ஆம் தேதி பிற்பகலில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன.இந்த நிலையில் நேற்று 18.03.2024 ஆம் தேதி, பிரதமர் மோடி, கோவை நகரத்தில் தெருத்தெருவாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிகழ்வுக்கு பள்ளிக் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பா.ஜ.க.வினர் மீதும், மோடியின் மீதும் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலகத்திறகு புகார் அனுப்பப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்