விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கோவில்பட்டியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2022-07-03 15:09 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கதிரேசன் ரோட்டில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் கடந்த 1-ந்தேதி கும்பாபிஷேகம் காப்பு கட்டுதல், கும்பத்தில் தீர்த்தம் நிரப்பப்பட்டு கோவிலை வலம் வந்து யாகசாலையில் எழுந்தருளல் மற்றும் யாகசாலையில் தீர்த்த குடங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ெஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகளும் நடை பெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோவில் பிரகாரம் வழியாக எடுத்து செல்லப்பட்டு கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஆயிரத்தெண் விநாயகருக்கு 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் தொழில் அதிபர்கள் விநாயகா ரமேஷ், வெங்கடேஷ் சென்னகேசவன், டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, நகர செயலாளர் விஜய பாண்டியன், யூனியன் துணைத்தலைவர் பழனிசாமி, எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலதா, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கோவில் தலைவர் வாசுதேவன், துணைத்தலைவர் குருநாதன், செயலாளர் செல்வம் மற்றும் கோவில்நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்