கோவில்பட்டியில்விநாயகர் சதுர்த்திவிழா

கோவில்பட்டியில்விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-09-20 18:45 GMT

கோவில்பட்டி(மேற்கு):

கோவில்பட்டி சீனிவாசா நகரில் கே.கே.ஜி. நண்பர்கள் குழு சார்பில் 10-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோலப்போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கி, அன்னதானத்தை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்