வேதாரண்யேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2023-09-12 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த கோவிலில் ராமபிரான் ராவணனை சம்காரம் செய்துவிட்டு திரும்பிய போது அவருக்கு ஹத்தி தோஷம் ஏற்பட்டதாகவும், அந்த தோஷத்துடன் இக்கோவிலுக்கு வந்த ராமருக்கு இங்குள்ள மேற்கு பார்த்த விநாயகர் தன் வலது கால் தூக்கி ராமருக்கு பிடித்திருந்த ஹத்தி தோஷத்தை நீக்கியதாக வரலாறு கூறுகிறது. சிறப்பு பெற்ற இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வீரகத்தி விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கேடயத்தில் எழுந்தருளி கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு வேத மந்திரங்கள், தேவாரங்கள் முழங்க கொடி ஏற்று விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்