அந்தியூரில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

அந்தியூரில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-08-23 21:27 GMT

அந்தியூர்

அந்தியூரில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வீடு மற்றும் பொது இடங்களில் சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் அந்த சிலைகள் எடுத்து செல்லப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

சிலைகள் விற்பனை மும்முரம்

இதை முன்னிட்டு அந்தியூரில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு வடிவங்களில் ஒரு அடி முதல் 4 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன. அந்தியூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், அந்தியூருக்கு வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.

இதனால் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. உயரத்தை பொறுத்து விநாயகர் சிலைகள் ரூ.100 முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை ஆனது. 

Tags:    

மேலும் செய்திகள்