விழுப்புரம் மாவட்டத்தில்43 போலீசார் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 43 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
விக்கிரவாண்டி போக்குவரத்து போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் இளையமாறன், மலரவன், கிளியனூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கமலவள்ளி உள்ளிட்ட 43 போலீசார், விழுப்புரம் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பிறப்பித்துள்ளார்.