விழுப்புரம் நகரில் வளர்ச்சி திட்டப்பணிகளை நகரமன்ற தலைவர் ஆய்வு

விழுப்புரம் நகரில் வளர்ச்சி திட்டப்பணிகளை நகரமன்ற தலைவர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-04-20 18:45 GMT

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வருகிற 26, 27-ந் தேதிகளில் விழுப்புரம் வருகை தந்து வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்கிறார். இதையொட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் விழுப்புரம் நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை நேற்று நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணிகள், அனிச்சம்பாளையம் மீன் மார்க்கெட், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பூங்கா பராமரிப்பு பணிகள், நகராட்சி பூங்கா பராமரிப்பு பணிகள், காமதேனு நகர், சுபிக்ஷா கார்டன் ஆகிய இடங்களில் நடந்து வரும் பூங்கா பணிகள், மகாராஜபுரத்தில் கட்டப்பட்டு வரும் எரிவாயு தகன மேடை பணிகள் உள்ளிட்டவற்றை நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பார்வையிட்டதோடு, அப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த அவர், பணிகளை விரைந்து முடிக்குமாறும், அதே நேரத்தில் தரமான முறையில் பணிகளை மேற்கொள்ளுமாறும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மண்டல செயற்பொறியாளர் ரூபன்சுரேஷ் பொன்னையா, நகராட்சி ஆணையாளர் சுரேந்திரஷா, பொறியாளர் உமா, உதவிப்பொறியாளர் ராபர்ட்கிளைவ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்