உணவு சமைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்த வந்த கிராம மக்கள்

உணவு சமைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து, மழை வேண்டி கிராம மக்கள் பாரம்பரிய வழிபாடு நடத்தினர்.

Update: 2022-08-24 18:05 GMT

முதுகுளத்தூர்

உணவு சமைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து, மழை வேண்டி கிராம மக்கள் பாரம்பரிய வழிபாடு நடத்தினர்.

உணவு பாத்திரங்களுடன் ஊர்வலம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொசுக்குடிபட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. நன்கு மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டி, அந்த கிராம மக்கள் காளியம்மன்​கோவிலுக்கு பாரம்பரிய உணவுகள் சமைத்து, பாத்திரங்களில் தலைச்சுமையாக ஊர்வலமாக கொண்டு சென்று வழிபாடு செய்கின்றனர். பல ஆண்டுகளாக பாரம்பரியமாக இந்த வழிபாட்டை பின்பற்றி வருகிறார்கள்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி ஓர் இடத்தில் அரிசி சாதம், கேப்பை கூழ், மாவு வகை உணவை சமைத்தனர். பின்னர் அவற்றை பாத்திரங்களில் எடுத்து தலையில் சுமந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக ஆண்களும், ெபண்களுமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

பனை ஓலையில்...

அங்கு காளியம்மன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அதன்பிறகு உணவை ஒன்றாக கலந்து, கஞ்சியாக்கி பனை ஓலையில் ஊற்றி வழிபட்டனர். மேலும் பனை ஓலையில் வாங்கி கிராம மக்களும் சாப்பிட்டனர். இந்த பாரம்பரிய வழிபாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்