போதிய பஸ்கள் இயக்காததால் சரக்கு வாகனங்களில் பயணம் செய்யும் கிராம மக்கள்

போதிய பஸ்கள் இயக்காததால் சரக்கு வாகனங்களில் பயணம் செய்யும் கிராம மக்கள்

Update: 2023-05-27 18:45 GMT

சிவகாசி,

தொழில் நகரமான சிவகாசியை சுற்றி சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் தான் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகிறது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்கு சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஊர்களுக்கு வந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் போதிய பொது போக்குவரத்து வசதி இல்லை. சிவகாசியில் இருந்து கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த பல அரசு பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சில பஸ்கள் தேவைப்படும் போது இயக்கப்படும் நிலை தொடர்கிறது. இதனால் பஸ்களை எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்கள் தற்போது ஊரில் உள்ள சரக்கு வாகனங்களில் வெளியூர் சென்று வருகிறார்கள். இதுபோன்ற சரக்கு வாகன பயணங்களுக்கு தடைவிதித்த போதிலும் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே வளர்ந்து வரும் சிவகாசியை சுற்றி உள்ள கிராமங்களுக்கு தேவையான பஸ்களை இயக்க அரசு முன் வர வேண்டும். சில புதிய வழித்தடங்களை உருவாக்கி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமாவது பஸ்களை இயக்கினால் பொதுமக்கள் நிம்மதியான பயணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்