சாலையில் தேங்கும் மழைநீரால் கிராம மக்கள் அவதி

கலவை அருகே சாலையில் தேங்கும் மழைநீரால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-10-06 11:23 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வெள்ளம்பி கிராமத்தில் சிவன் கோயிலுக்கு செல்லும் சாலையில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலையில் குளம் போல் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையில் சுமார் மூன்று மாதங்களாக மழை நீரானது இதே நிலையில் தான் தேங்கி கிடக்கிறது. இந்த மழைநீர் வெளியே செல்ல வடிகால் வசதி இல்லாததால் பல மாதங்களாக தேங்கி இருப்பதால். அப்பகுதியில் கொசு புழுக்கள் அதிகரித்து வருகிறது. அதேபோல் இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் உள்ளது. .இதனால் எங்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற வைரஸ் காய்ச்சல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம்.

இது சம்பந்தமாக பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சாலையில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதுடன் நிரந்தர தீர்வாக வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்