பேரையூர்
டி.கல்லுப்பட்டி அருகே அ.தொட்டியபட்டி கிராமத்தில் அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டு இருப்பதாகவும், அதனை அகற்ற நீதிமன்ற உத்தரவின் பேரில், வருவாய்த்துறையினர், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர், போலீசார்கள், கோவிலை அகற்றுவதற்காக நேற்று சென்றனர். உடனே அங்கிருந்த கிராம மக்கள் கோவிலை அகற்றக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து பேச்சுவார்த்தை நடந்தது. கோவில் சம்பந்தமாக 2 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று கிராம மக்கள் கூறினார்கள். இதனால் கோவிலை இடிக்க வந்த அதிகாரிகள் திரும்பச் சென்றனர்.